மாவட்ட செய்திகள்

மும்பையில் இருந்து திருப்பூர் வந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை

மும்பையில் இருந்து திருப்பூர் வந்த 10 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருப்பூர்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 17-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பலர் அனுப்பி வைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மும்பையில் இருந்து திருப்பூருக்கு வந்த திருப்பூரை சேர்ந்த 10 பேருக்கு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி மும்பையில் பல்வேறு பகுதிகளில் திருப்பூரை சேர்ந்த 10 பேர் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இவர்கள் போக்குவரத்து முடக்கத்தின் காரணமாக தங்களது சொந்த ஊரான திருப்பூருக்கு வர முடியாமல் இருந்தனர். இதன் பின்னர் அரசு உதவியுடன் பஸ் மூலம் 10 பேரும் மும்பையில் இருந்து திருப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை திருப்பூரை வந்தடைந்த அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரின் விவரங்கள் மற்றும் முகவரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்களது பரிசோதனை முடிவு தெரியவரும். மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், சந்தேகத்தின் பேரில் இவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை