மாவட்ட செய்திகள்

புதுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

புதுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகி உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

இதற்கிடையே அரியாங்குப்பம் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த இருவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒருவர் ஜிப்மரிலும் மற்றொருவர் கோரிமேடு இதயநோய் ஆஸ்பத்திரியிலும் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதிப்பு இல்லை

அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இருந்தபோதிலும் அவர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை