மாவட்ட செய்திகள்

தினம் ஒரு தகவல் : செல்போன் கதிர்வீச்சு

சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கதிர்வீச்சு காரணம் என்கிறார்கள். உண்மையில் கதிர்வீச்சைத் தாண்டி உணவு கிடைக்கும் தன்மை, கூடுகட்டும் இடங்கள் போன்றவை குறைந்துவிட்டதே முக்கிய காரணம்.

தினத்தந்தி

நகர்மயமாக்கம் காரணமாகச் சிட்டுக்குருவிகளின் வாழிடம் அதிவேகமாக அழிந்துவிட்டன. மேலும் தற்போது தானியங்கள் பிளாஸ்டிக் பைகளில் வருவதால், குருவிகளுக்கு தானியங்கள் கிடைப்பதில்லை. குருவிக் குஞ்சுகளின் அதிவேக வளர்ச்சிக்குத் தோட்டங்களில் கிடைக்கும் புழு, பூச்சிகள்தான் முக்கிய உணவு. பூச்சிக்கொல்லிகள் அதிகரிப்பு, புழு பூச்சிகளைக் குறைத்துவிட்டது. இப்படியாக குஞ்சுகள் முதல் வளர்ந்த குருவிகள் வரை உணவு கிடைக்காமல் போவதாலேயே குருவியின் இனப்பெருக்கம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

சிட்டுக்குருவிகள் இருக்கட்டும். செல்போன் கதிர்வீச்சால், மனித உடல்நலனுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும். செல்போன் கதிர்வீச்சு அதிக காலம் உடலில் படுவதால், மரபணு மாற்றத்தில் பங்காற்றுவதாகவோ, புற்றுநோய் கட்டிகளை உருவாக்குவதாகவோ இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் நிறுவவில்லை. செல்போன் கதிர்வீச்சு, சீரமைக்க முடியாத உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

நமது மூளை செயல்பாடுகள் மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. மின்காந்த அலைகளான செல்போன் அலைகள், நமது உடலில் செயல்படும் மின்சாரத்துடன் இடையீடு செய்யும். இதனால் செல்போன் கோபுரங்கள் அருகே வாழும் மக்களுக்கு தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதேநேரம், இதனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள், ஏற்படுவதை உறுதிப்படுத்துவது போன்ற ஆராய்ச்சிகள் இன்னும் நடக்க வில்லை. செல்போன் கதிர்வீச்சு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகள் ஏன் இதுவரை முறைப்படி நடத்தப்படவில்லை என்பதும் சிந்தனைக்குரியது.

செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளை பல நாடுகள் கடுமையாக்கி உள்ளன. செல்போன் கோபுரங்களுக்கு அருகே வாழ்வது என்பது மைக்ரோவேவ் ஓவனுக்குள் நாம் வாழ்வதைப் போன்றது. மும்பையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணிக்கும் ஒருவர், அதில் 90 சதவீத நேரம் கடுமையான கதிர்வீச்சை எதிர்கொள்கிறார். இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க முடியாது. அதேநேரம், செல்போனில் அதிக நேரம் பேசாதீர்கள். ஹாண்ட்ஸ் பிரீ கருவி அல்லது குறைந்த சத்தத்தில் வைத்து பேசுங்கள், நிலவழித் தொலைபேசியில் பேசுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து