மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க முகாம்

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க வாரம் திட்டத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

அப்பொது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரம் வரும் 19-ந் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளிள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் விடுபடுபவர்களுக்கு வரும் 21-ந் தேதியன்று சிறப்பு முகாம் நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பிரியா ராஜ் மற்றும் மருத்துவ நல பணியாளர்கள், பள்ளிக்கல்வித்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து