போடி:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில் கேரள-தமிழக எல்லை பகுதியான தேனி மாவட்டம் போடி மெட்டு, கம்பம் மெட்டு மற்றும் குமுளி சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
டிரைவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கோழி மற்றும் கால்நடை தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பபடுகின்றன.