மாவட்ட செய்திகள்

ஆயக்காரன்புலத்தில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நெல் மூட்டைகளை முறையாக அரவைக்கு அனுப்பாததை கண்டித்து ஆயக்காரன்புலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

வாய்மேடு:

நெல் மூட்டைகளை முறையாக அரவைக்கு அனுப்பாததை கண்டித்து ஆயக்காரன்புலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேமிப்பு கிடங்கு

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகையில் நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு வேதாரண்யம் பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சம்பா, தாளடி பருவத்தின் போது விவசாயிகளிடம் இருந்து 10 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது. இதில் அரவைக்கு அனுப்பியது போக 25 ஆயிரம் மூட்டைகள் கடந்த ஒரு ஆண்டாக தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டது.

ஆர்ப்பாட்டம்

மேலும் நெல் முளைத்து விட்டது. இதனால் பல லட்ச ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு விளைவித்த நெல் முறையாக அரவைக்கு அனுப்பாததையும் கண்டித்து ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகையில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கு முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு தலைமை தாங்கினார்.

இதில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாலு, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முருகையன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அருள், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து