திருவாரூர்,
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை இந்த மாதத்தில் 2 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்தும் விலை உயர்வை திரும்ப பெறக் கோரியும் தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் ஆர்ப்பாட்டம் திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணிசேகர், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விமலாபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிலிண்டருக்கு மாலை
மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் தேவா, கலியபெருமாள், நகர செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விலை உயர்வை திரும்ப பெறக்கேரி கோஷங்கள் எழுப்பினர்.