மாவட்ட செய்திகள்

கொடுமுடி அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் காயம்

கொடுமுடி அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது. இதில் முதியவர் காயம் அடைந்தார்.

தினத்தந்தி

கொடுமுடி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சின்னாகண்டனூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). அவருடைய மனைவி சின்னம்மாள். இவர் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் ஆறுமுகம் தனியாக வசித்து வருகிறார்.

கொடுமுடி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஆறுமுகத்தின் வீட்டின் கான்கிரீட் மேற்கூரை மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திடீரென இடிந்து விழுந் தது.

காயம்

இதில் ஆறுமுகம் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு காயம் அடைந்தார். வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து