மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தில் விவசாயி வெட்டிக்கொலை - வக்கீல் உள்பட 10 பேருக்கு வலைவீச்சு

மதுரை அருகே இளமனூரில் முன்விரோதத்தில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வக்கீல் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

புதூர்,

மதுரை அருகே உள்ள இளமனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் காஞ்சிவனம்(வயது 55), விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக இருதரப்பினரும் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் காஞ்சிவனம் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி தனலட்சுமி உடன் வெளியே செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை வெளியே எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அந்த கும்பல் காஞ்சிவனத்திடம் தகராறு செய்தது. பின்னர் பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த தங்கம் என்பவர் தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பல், தங்கத்தையும் தாக்கிவிட்டு தப்பியோடியது.

ஆயுதங்களால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த காஞ்சிவனம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். தாக்கப்பட்டத்தில் காயமடைந்த தங்கம் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தனலட்சுமி சிலைமான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது, இளமனூரை சேர்ந்த வக்கீல் கருப்பசாமி, சீனு, தெய்வேந்திரன், பாலமுருகன், வெள்ளைச்சாமி, இளங்கோவன், ஈஸ்வரன், கருப்பசாமி, அய்யாக்கண்ணு, மருதுபாண்டியன் ஆகிய 10 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் கருப்பசாமி உள்பட 10 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்