மாவட்ட செய்திகள்

பழவேற்காடு ஏரியில் குவிந்த பிளமிங்கோ பறவைகள்

பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு ஏரி 15,367 ஹெக்டேர் நிலபரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக விளங்குகிறது.

தினத்தந்தி

இந்த ஏரியில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்த பின்னர் திரும்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு பறவையான கிரேட்டர் பிளமிங்கோ எனப்படும் பெரிய பூ நாரைகள் இரை தேடி இயற்கை எழில் கொஞ்சும் பழவேற்காடு ஏரியில் தற்போது கூட்டம் கூட்டமாக வலம் வருகிறது. இந்த பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளை நிற உடலும் நீண்ட சிவந்த கால்களையும் கொண்டவை. இந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயரும் தன்மை கொண்டவை.

இந்நிலையில் பூங்குளம் ஊராட்சியில் அடங்கிய சின்னமாங்கோடு மீனவ படகுத்துறையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள பழவேற்காடு ஏரியில் இந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து இரைதேடி செல்கின்றன. இதனை காண ஏராளமான மக்கள் ஏரிக்கரையில் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து