மாவட்ட செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

தினத்தந்தி

சேலம்,

சேலம் அம்மாபேட்டை புட்டாநாயக்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 33). பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கேசவன் (28). சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (42). இவர்களில் கண்ணன், கேசவன் ஆகியோர் சேர்ந்து 12 வயதுடைய சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கண்ணன், கேசவன் ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல் ரவீந்திரன் என்பவர் 12 மற்றும் 15 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அம்மாபேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவீந்திரனை கைது செய்தனர்.

கைதான கண்ணன், கேசவன், ரவீந்திரன் ஆகிய 3 பேரும், சிறுமிகளுக்கும், அவர்களுடைய குடும்பத்தினரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதுடன் அமைதியான வாழ்க்கையை நிலைகுலைய செய்து உள்ளனர்.

எனவே கண்ணன், கேசவன், ரவீந்திரன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சேலம் டவுன், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை பரிசீலித்து கண்ணன், கேசவன், ரவீந்திரன் ஆகிய 3 பேரையும் பாலியல் குற்றவாளிகள் என்ற பிரிவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து