மாவட்ட செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது

நெல்லை மாவட்டத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது.

தினத்தந்தி

நெல்லை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

ஒரு நாளைக்கு 100 அட்டைதாரர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2-ந் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு சில கடைகளில் சமூக இடைவெளி குறைந்தது.

கூட்டம் அலைமோதியது

இதனை அறிந்த முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடு, வீடாக நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து கடந்த 5-ந் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று ரூ.1,000 நிவாரண உதவி வழங்கும் பணியை தொடங்கினர். அப்போது அவர்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்பட்டது. அதில் எந்த தேதியில், எந்த நேரத்தில் நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்க வர வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் ரூ.1,000 வழங்கும் பணி நிறைவடைந்தது.

நேற்று முதல் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவைகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் சமூக விலகல் வட்டத்துக்குள் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். பல கடைகளில் கூட்டம் அலைமோதியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து