மாவட்ட செய்திகள்

புனேவில் இருந்து 2 லட்சத்து 45 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

ஆலந்தூர்,

தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 2 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 860 தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 15 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

இந்தநிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 21 பெட்டிகளில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 340 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு வந்தன. பின்னர் அவை, விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை