மாவட்ட செய்திகள்

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

காட்டுமன்னார்கோவில் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

தினத்தந்தி

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வடக்குகொளக்குடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 45). இவர் மரம் ஏறும் கூலி தொழில் செய்து வந்தார். இவர் நேற்று காலை காட்டுமன்னார்கோவில் சாலைக்கரை வீதியில் உள்ள ஒருவரது தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக சென்றார்.

அப்போது அங்குள்ள மரத்தில் ஏறிய பன்னீர்செல்வம் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். சுமார் 50 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி அறிந்த அவரது உறவினர்கள் அங்கு வந்து பிணமாக கிடந்த பன்னீர்செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பன்னீர்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த பன்னீர்செல்வத்துக்கு கவிதா என்கிற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை