மாவட்ட செய்திகள்

கஜா புயல் பாதிப்பு காஞ்சீபுரத்தில் இருந்து ரூ.20 லட்சம் நிவாரண பொருட்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண பொருட்கள், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் நேரடி மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டது.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் இருந்து 2 லாரிகள் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பிலான போர்வைகள், மளிகை பொருட்கள், பால் பவுடர், தண்ணீர், கொசுவர்த்திகள், உள்பட நிவாரண பொருட்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்துக்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் நேரடி மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், அ.தி.மு.க. நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் செ.ரமேஷ், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், தும்பவனம் ஜீவானந்தம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை