மாவட்ட செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் அ.தி.மு.க.வேட்பாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.வாக்குறுதி

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரான வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளராகபோட்டியிடுகிறார்.

தினத்தந்தி

மதுரை,

திருப்பரங்குன்றம் பகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குபெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் உற்சாகமான வரவேற்பு கொடுத்து வருகின்றனர் இதில்வேட்பாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.மக்கள் மத்தியில் பேசும்போது தொகுதிக்கான பிரத்யேக தனியார் துறை வேலைவாய்ப்பு மையம் உருவாக்கப்படும்.புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். திருப்பரங்குன்றம் அரசு பொது மருத்துவமனையில் நவீன ஸ்கேன் சென்டர் உருவாக்கப்படும் சோளங்குருணி உள்ளிட்ட கிராம பகுதி பூந்தோட்டவிவசாயிகள் பயனடையும் விதமாக சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும் நிலையூரில் நெசவாளர்களுக்கு அரசு தறிக்கூடம் அமைக்கப்படும் நூல் பாவுகளுக்கு மானியம் வழங்கப்படும் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் படகு சவாரி மற்றும்சுற்றுவட்ட நடைபயிற்சி தளம் அமைக்கப்படும் தொகுதி முழுவதும் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் பாரம்பரிய மரக்காடுகள் வளர்க்கப்படும் திருநகர் அண்ணா பூங்காவில் செயற்கை இழை ஹாக்கி தளம் அமைக்கப்படும் மேலும் தொகுதி முழுவதுமாக விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும். தொகுதி முழுவதும் குளிர்சாதன பயணியர் நிழற்குடை, சுத்திகரிப்பு குடிநீர் வசதி செய்யப்படும் விமான நிலையம் அருகில் பூ மற்றும் வெள்ளாடுகளுக்கான சிறப்பு ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்வாகனம் நிறுத்தம்அமைக்கப்படும். மயில்களுக்கு சரணாலயம் கிரிவலப்பாதையில் பக்தர்கள் இளைப்பாறும் நவீன கூடம் அமைக்கப்படும். வடபழஞ்சி, தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, வேடர்புளியங்குளம் தோப்பூர் வரை பெரியார் துணை கால்வாய் நீட்டிக்கப்படும் வலையன்குளம் விவசாயப் பெருமக்களுக்கு குளிர்பதன கிடங்கு மற்றும் இணய விற்பனைத் தளம் அமைக்கப்படும் ஆகவே மக்கள் சேவை செய்ய உங்களில் ஒருவனாக இருந்து செயல்படகாத்திருக்கிறேன்.

தொகுதிக்கு மூன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இயக்கப்படும்.அதில் தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் மக்கள் தேவைகளுக்காக செயல்படும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையில் விடுத்துள்ளஒரு குடும்பத்திற்கு 6 விலையில்லாசிலிண்டர், பெண்கள் துணி துவைப்பதற்காக விலையில்லா வாஷிங் மெஷின்,குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ1500 வழங்கப்படும் உள்பட. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடிய அரசாக அம்மா அரசுசெயல்படும். தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க.வினருக்கு சொல்லத்தான் தெரியும். செய்யத் தெரியாது ஆகவேவாஷிங் மெஷின் மாதம் 1,500,ஆறு சிலிண்டர் பெற்றுவிடவும், திருப்பரங்குன்றம் தொகுதி வளர்ச்சி பெறவும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார். தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட துணை செயலாளர் முத்துகுமார், பகுதி துணைச் செயலாளர்செல்வகுமார், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து