மாவட்ட செய்திகள்

தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் அவதி

தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

செந்துறை,

கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்ததில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று இடி, மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை வெளுத்து வாங்கியது. பின்னர் அவ்வப்போது சடசடவென மழை யுடன் ஆரம்பித்து, சில நிமிடங்களில் நின்று போவதும், பின் மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. கனமழையால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மழை கோட் அணிந்து சென்றனர்.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. அரியலூரில் உள்ள செட்டி ஏரி, சந்தன ஏரி, துரை ஏரி ஆகியவை நேற்று முன்தினம் பெய்த மழை யினால் நிரம்பின. மருதையாற்றில் இருகரையும் தொட்டபடி செம்மண் நிறத்தில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைக்காடு கிராமத்திற்கும், கடலூர் மாவட்டம் சவுந்திரசோழபுரத்திற்கும் இடையே வெள்ளாற்றில் அமைக்கப்பட்டு இருந்த தரைப்பாலம் நேற்று முன் தினம் நள்ளிரவு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதையொட்டி அரியலூர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை