மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

நெல்லை மாநகர போலீசார் சார்பில் பாளையங்கோட்டையில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.

தினத்தந்தி

நெல்லை,

தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து தான் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று பொதுமக்களிடையே காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர ஆயுதப்படை மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து நேற்று போலீசார் ஹெல் மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் பேரணி சென்றனர்.

இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை ஆயுதப்படை போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாது சிதம்பரம், ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி, பாளையங்கோட்டை பஸ்நிலையம், முருகன்குறிச்சி, மார்க்கெட், சமாதானபுரம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழி யாக மீண்டும் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைந்தது.

பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து