மும்பை,
மராட்டிய மாநிலத்தில் பயோ மெட்ரிக் முறையில் ஒரு நபரை அடையாளம் காணும் முறையை நடைமுறைப்படுத்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
போலீசார் தங்களிடம் உள்ள டிஜிட்டல் தகவல்கள் மூலம் 0.46 வினாடிகளில் ஒருவரின் கைரேகை, கருவிழி கொண்டு அவரை அடையாளம் காண முடியும். மேலும் அந்த நபர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா போன்ற விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.