மாவட்ட செய்திகள்

காந்திவியில் 2 பெண் குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

மும்பை காந்திவிலியில் 2 பெண் குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை காந்திவிலி மேற்கு லால்ஜிபாடா பகுதியில் இரும்பு பட்டறை நடத்தி வருபவர் அஸ்கர் அலி (வயது 45). இவருக்கு 4 பெண் குழந்தைகள். இதில் 8 மற்றும் 12 வயதிலான 2 பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நேற்று அவர் பட்டறைக்கு வந்தார்.

பட்டறையில் திடீரென அந்த 2 குழந்தைகளையும் கொன்று விட்டு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறந்த போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய அஸ்கர் அலி மற்றும் தரையில் பிணமாக கிடந்த 2 பெண் குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மற்ற 2 குழந்தைகள் தாயுடன் இருந்ததால் உயிர் தப்பின.

நிதி நெருக்கடி காரணமாக இந்த துயர முடிவை அஸ்கர் அலி தேடிக்கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை