மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி.யிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனு

கோவில்பட்டியில், கனிமொழி எம்.பி.யிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டிக்கு வந்த கனிமாழி எம்.பி.யிடம் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரங்கநாயகலு உள்ளிட்டவர்கள் மனு வழங்கினர். அதில், இளையரசனேந்தல் பிர்காவைச் சேர்ந்த 12 பஞ்சாயத்துகள் கோவில்பட்டி தாலுகாவுடன் கடந்த 2008-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.

எனினும் இளையரசனேந்தல் பிர்கா கடந்த 13 ஆண்டுகளாக கோவில்பட்டி யூனியனுடன் இணைக்கப்படாமல் குருவிகுளம் யூனியனில் உள்ளது. எனவே இளையரசனேந்தல் பிர்காவிலுள்ள 12 பஞ்சாயத்துகளை உடனடியாக கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வேண்டும், அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியன் உருவாக்கி தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்