மாவட்ட செய்திகள்

மும்பையில் 8 பெண் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்

மும்பை பெருநகரத்தில் மொத்தம் 94 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அனைத்து போலீஸ் நிலையங்களும் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

தினத்தந்தி

மும்பை,

இந்த நிலையில், 8 போலீஸ் நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு பெண் சீனியர் இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி ஏர்போர்ட், கப்பரேடே, சயான், சகார், வன்ராய், பந்த்நகர், ஆரே, பி.கே.சி. ஆகிய போலீஸ் நிலையங்கள் முறையே சீனியர் இன்ஸ்பெக்டர்கள் அல்கா மண்டாவே, ரேஷ்மி ஜாதவ், மிருடுலா லாட், லதா ஸ்ரீசத், ஜோட்சனா ராசம், ரோகினி காலே, வித்யலட்சுமி, கல்பனா கடேக்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நாட்டிலேயே ஒரு பெருநகரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் அதிகளவில் பெண் சீனியர் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளது இது தான் முதல் முறை என மும்பை போலீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. மேலும் அதில் மேற்படி 8 பெண் போலீஸ் சீனியர் இன்ஸ்பெக்டர்களின் குழு புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து