மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் கல்லூரி மாணவர் தற்கொலை

நாகர்கோவிலில் மரத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

தினத்தந்தி

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மேலப்பெருவிளை பகுதியை சேர்ந்த தமிழ் செல்வனின் மகன் அனிஷ் (வயது 19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா காரணமாக கல்லூரிகள் தற்போது திறக்கப்படாததால், பால் வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அனிஷ் பால் வியாபாரத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருடைய தாயார் திட்டியதாக தெரிகிறது. இதனால் அனிஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிஷ் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை.

இதனால் அவரை பெற்றோர் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வெள்ளை ஓடைக்கரை பகுதியில் ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது, அனிஷ் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், அனிஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இருந்தாலும் மேல் விசாரணை நடந்து வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து