மாவட்ட செய்திகள்

பெரம்பூரில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி மகன்-மகளுக்கு சிகிச்சை

பெரம்பூரில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியானார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரது மகன், மகளுக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

பெரம்பூர்,

பெரம்பூர் ரங்கசாமி தெருவை சேர்ந்தவர் முரளி, எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நித்தியா (வயது 34). இவர்களுக்கு லோகேஷ் (11) என்ற மகனும், லத்திகா (8) என்ற மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக லோகேசுக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது.

மகனுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் தாய் நித்தியாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதை ஆஸ்பத்திரி வட்டாரம் உறுதி செய்தது.

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி நித்தியா இறந்தார். இதற்கிடையே அவரது மகள் லத்திகாவுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பன்றி காய்ச்சலுக்கு தாய் பலியான நிலையில் அவரது மகன் லோகேஷ், மகள் லத்திகாவும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து