மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி வீட்டில் ரூ.4½ லட்சம் நகைகள் திருட்டு வேலைக்கார பெண் மீது புகார்

புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்ற வேலைக்கார பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே அடப்பன்வயல் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(வயது 61). இவர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருச்சி, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்த வைரம் மற்றும் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பில் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

நகைகளை வீட்டில் வேலை செய்து வந்த திருவப்பூரை சேர்ந்த ராஜலட்சுமி கொஞ்சம், கொஞ்சமாக திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிந்தராஜன் வீட்டில் வேலைசெய்து வந்த ராஜலட்சுமியை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து