மாவட்ட செய்திகள்

புதுப்பேட்டையில், பெண் சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

புதுப்பேட்டையில் பெண் சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கடலூர்,

புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் அழகுபெருமாள்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த ஊரைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி தமிழரசி(வயது 53). சாராய வியாபாரியான இவர், தனது வீட்டின் எதிரே உள்ள குப்பைக்குள் 3 டிராக்டர் டியூப்பில் சுமார் 1,200 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து, அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழரசியை இன்ஸ்பெக்டர் ரேவதி கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

தமிழரசி மீது ஏற்கனவே புதுப்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் பண்ருட்டி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் மதுகடத்தல் தொடர்பாக 10 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில் தமிழரசியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழரசியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி கைது செய்தார். இதற்கான உத்தரவு நகல் சிறை காவலர்கள் மூலம் தமிழரசியிடம் போலீசார் வழங்கினர்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது