மாவட்ட செய்திகள்

சேலத்தில், ஊரடங்கில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க 15 குழுக்கள் அமைப்பு-போலீஸ் துணை கமிஷனர் தகவல்

சேலத்தில் கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் துணை கமிஷனர் மூர்த்தி தெரிவித்தார்.

தினத்தந்தி

சேலம்:

சேலத்தில் கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் துணை கமிஷனர் மூர்த்தி தெரிவித்தார்.

போலீசார் தீவிர கண்காணிப்பு

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வருகிற 24-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சேலம் மாநகரில் ஊரடங்கை பின்பற்றாமல் பலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதற்காக மாநகரில் 16 இடங்களில் தற்காலிகமாக வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுதவிர இ-பதிவு இல்லாமல் சேலம் மாநகருக்குள் வருவதை தடுக்க 6 இடங்களில் தற்காலிகமாக சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

15 குழுக்கள் அமைப்பு

இந்த நிலையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கில் பொதுமக்களின் நடமாட்டத்தை தடுக்க போலீசார் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் மாநகரில் புதிதாக குற்றம் மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுபேற்ற மூர்த்தி கூறியதாவது:-

சேலம் மாநகரில் ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை முதலில் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறோம். இந்த நிலையில் பொதுமக்களின் நடமாட்டத்தை தடுக்க மாநகரில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வருவாய்த்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளனர்.

இ-பதிவு

இந்த குழுவினர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் திருமணம், இறப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்துக்கு சென்று அங்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக உள்ளார்களா? என கண்காணிப்பார்கள். மேலும் அங்கு முதலில் கூட்டம் கூடாதபடி நடவடிக்கை எடுக்கப்படும். இ-பதிவு இல்லாமல் வருபவர்களை தற்போது திருப்பி அனுப்பி வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் இ-பதிவு இல்லாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இ-பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் நேற்று சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சால வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து