மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவிலில் ரெயிலில் அடிபட்டு சிறுவன் பலி

சங்கரன்கோவிலில் ரெயிலில் அடிபட்டு சிறுவன் பலியானான்.

தினத்தந்தி

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பாரதிநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத சிறுவன் பிணமாக கிடந்தான். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அந்த சிறுவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, பிணமாக கிடந்த சிறுவன் சங்கரன்கோவில் பாரதிநகரை சேர்ந்த அண்ணாத்துரை மகன் சுடலை (வயது 16) என்பதும், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. மேலும் சுடலை நீண்ட நாட்களாக இருதயநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் அடிபட்டு சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை