மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் ஏரிக்கரையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்து வீசியது யார் என போலீஸ் விசாரணை

ஸ்ரீபெரும்புதூரில் ஏரிக்கரையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்து வீசியது யார் என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரி அருகே ஏரி கரையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதால் தூர் நாற்றம் வீசுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் பிணம் கை, கால் கட்டப்பட்ட நிலையில் போர்வையால் சுற்ற பட்டு அழுகி கிடந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? அந்த நபரை கொலை செய்து இங்கு வீசியது யார்? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை