மாவட்ட செய்திகள்

தாம்பரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

மேற்கு தாம்பரம் திருநீர்மலை சாலை நாகரத்தினம் நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் திருநீர்மலை சாலை நாகரத்தினம் நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்த மர்மநபர், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை பிளாஸ்டிக் பைகளால் மூடினார்.

பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை ஆப் செய்துவிட்டு, அதை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால் முடியாததால் ஏமாற்றுத்துடன் திரும்பிச்சென்றதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக வங்கியின் தாம்பரம் கிளை மேலாளர் ராஜவேல் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து