மாவட்ட செய்திகள்

பாம்பன் பகுதியில், தூக்குப்பாலத்தை கடந்து செல்ல காத்திருக்கும் கப்பல்கள்

பாம்பன் பகுதியில் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல கப்பல்கள் காத்துக்கிடக்கின்றன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 3 மிதவை கப்பல்களும், 2 இழுவை கப்பல்களும் வந்துள்ளன. பாலம் திறக்கப்படாததால் அவை குந்துகால் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து துறைமுக அதிகாரிகளிடம் கேட்டபோது, கப்பல்கள் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக வந்துள்ள விவரங்கள் குறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம். ஆனால் பாலத்தை திறப்பது குறித்த தகவல்கள் எதுவும் வரவில்லை. தூக்குப்பாலத்தை மாதத்துக்கு ஒருமுறை மட்டும் திறக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதிக்கு பிறகு இதுவரை பாலம் திறக்கப்படவில்லை. அந்த வகையில் ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. தூக்குப்பாலத்தை வாரம் ஒருமுறை திறந்தால் கப்பல்கள் காத்துக்கிடக்காமல் தாமதமின்றி கடந்து செல்ல வசதியாக இருக்கும். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம் என்று கூறினர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு