மாவட்ட செய்திகள்

திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

திருவாரூர்:

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்

அ.தி.மு.க.வினர் மீது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையோடு போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். பொய் வழக்கு போட்டு மிரட்டும் போக்கை தி.மு.க. கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட அவை தலைவர் அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வாசுகி ராமன், கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், மணிகண்டன், ஜீவானந்தம், அன்பழகன், செந்தில், நகர செயலாளர்கள் சண்முகசுந்தரம், மூர்த்தி, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்