மாவட்ட செய்திகள்

திருநெய்ப்பேரில் பயிர் அறுவடை பரிசோதனை - கலெக்டர் பார்வையிட்டார்

திருநெய்ப்பேரில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெறுவதை கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் கிராமத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனை நடந்தது. இந்த பணியினை மாவட்ட கலெக்டர் ஆனந்த் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருவாய் கிராமத்தில் புள்ளியியல் துறை கொடுக்கும் ரேண்டம் எண் அடிப்படையில் சர்வே எண் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படுகிறது.

பின்னர் அறுவடை காலத்தில் நெல் வயலில் 25 சதுர மீட்டர் பகுதியில் உள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு எவ்வளவு மகசூல் என அளவீடு செய்யப்படுகிறது. பின்னர் எக்டேருக்கு எவ்வளவு மகசூல் என கணக்கிடப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அப்போது வேளாண்மை இணை இயக்குனர் சிவக் குமார், உதவி இயக்குனர் (புள்ளியியல்) திருஞானம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஹேமா ஹெப்சிபா நிர்மலா மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு