மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளிகள் சாவு

திருப்பத்தூரில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் இஸ்மாயில் பேட்டையில் மெக்கா மதினா மசூதி உள்ளது. மசூதியில் சில நாட்களாக கட்டிட வேலைகள் நடந்து வருகிறது. நேற்று காலை வழக்கம் போல திருப்பத்தூர் அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாரதி (வயது 45) என்பவர் மசூதி மொட்டை மாடியில் இருந்து கட்டிடப் பணிக்காக பெரிய இரும்புக் கம்பிகளை வெட்டி துண்டாக்கி கொண்டிருந்தார்.

அவருடன் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மேஸ்திரி நாகமலை (32) மற்றும் பால் சீலிங் வேலை செய்து கொண்டிருந்த திருப்பத்தூர் ஆரிப் நகரைச் சேர்ந்த பிலால் (26) ஆகிய இருவரும் கம்பியை பிடித்துக் கொண்டு உதவி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது கம்பி பாரம் தாங்காமல் வளைந்து மேலே இருந்த மின்சார கம்பி மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பிலால் மற்றும் பாரதி பரிதாபமாக இறந்தனர்.

உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த நாகமலையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை