மாவட்ட செய்திகள்

வீரபாண்டியில், பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர், வீரபாண்டியில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

வீரபாண்டி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி குளம் பகுதியை சேர்ந்தவர் எட்வின். இவருடைய மகன் அலெக்ஸ் பாண்டியன் (வயது 25). பெயிண்டரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் திருப்பூர் திருவள்ளுவர் நகர் முதல் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவ்வப்போது வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த அவர் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அலெக்ஸ்பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்