திருவொற்றியூர்,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 84). டாக்டரான இவர், அதே பகுதியில் கிளினிக் வைத்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர் பார்த்தசாரதி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
அவருக்கு சுலோச்சனா என்ற மனைவியும், முத்து மீனாட்சி, மோகன லட்சுமி என 2 மகள்களும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். 3 பேருமே டாக்டர்கள்தான். பல வருடங்களாக குறைந்த கட்டணத்தில் குழந்தைகள் மற்றும் பொது மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் பார்த்தசாரதி, கொரோனாவுக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.