மாவட்ட செய்திகள்

தி.மு.க.வில் இணைந்த மாமல்லபுர பேரூராட்சி சுயேச்சை கவுன்சிலர்

மாமல்லபுரம் பேரூராட்சியில் ல் 9-வது வார்டான அண்ணாநகர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சியில் 9-வது வார்டான அண்ணாநகர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சிற்ப கலைஞர் பூபதி. இவர் நேற்று மாமல்லபுரம் நகர தி.மு.க. செயலாளர் விசுவநாதன் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார். இதனால் மாமல்லபுரம் பேரூராட்சியில் 4 கவுன்சிலர்களாக இருந்த தி.மு.க. கவுன்சிலர்களின் எண்ணிக்கை தற்போது 5-ஆக அதிகரித்துள்ளது.

தி.மு.க.வில் இணைந்த கவுன்சிலர் பூபதிக்கு நகர நிர்வாகிகள் சண்முகானந்தன், மோகன்குமார், சலீம் உள்ளிட்ட தி.மு.க. வினர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை