விழுப்புரம்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி விழுப்புரம் நகராட்சி 4-வது வார்டிற்குட்பட்ட விராட்டிக்குப்பம் பாதை பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கோல்டு சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு சமையல் கியாஸ் அடுப்பு, தையல் எந்திரம், பாத்திரங்கள், வேட்டி- சேலை என 400 பேருக்கு மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வார்டு செயலாளர் ஷாஜகான், வார்டு நிர்வாகிகள் பஞ்சாட்சரம், முருகன், காதர்பாஷா, கார்த்திக், மணி, ரமேஷ், முஸ்தபா, சுமன், மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.