மாவட்ட செய்திகள்

கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் பூட்டிய வீட்டுக்குள் போலீஸ்காரர் மர்ம சாவு

கீழ்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் பூட்டிய வீட்டுக்குள் போலீஸ்காரர் மர்மமான முறையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் போலீஸ்காரர் செந்தில்ஆறுமுகம் (வயது 36). இவர், வடபழனி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.

செந்தில்ஆறுமுகம் கடந்த 8 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக அவரது வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதற்கிடையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், உடனடியாக இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது போலீஸ்காரர் செந்தில்ஆறுமுகம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை