மாவட்ட செய்திகள்

கோபியில் நிதிநிறுவன ஊழியரை கொலை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோபியில் நிதி நிறுவன ஊழியரை கொலை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.

தினத்தந்தி

கடத்தூர்,

கோபி நாய்க்கன்காடு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஊழியராக வேலை பார்த்து வந்தவர் சண்முகம் (வயது 25). இந்தநிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி இரவு சண்முகம் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சேலம், கிச்சிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் சபரி சித்தார்த் (23), வேலவன் (37), ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது வாலிபர் ஆகியோர் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து சண்முகத்தை, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் சண்முகம் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், சபரி சித்தார்த், வேலவன் மற்றும் 17 வயது வாலிபர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களை கோபி முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து 3 பேரும் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது வாலிபர் கோவை கூர் நோக்கு இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில் கார்த்திகேயன், சபரி சித்தார்த் இருவரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பரில் கலெக்டர் கதிரவன் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கார்த்திகேயன், சபரி சித்தார்த் இருவரும் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை