மாவட்ட செய்திகள்

கொரோனா அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம்

கொரோனா அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம்

தினத்தந்தி

திருப்பூர்

வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வந்தவர்கள் கொரோனா அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம், என அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா அறிகுறி இருந்தால்...

இந்தியாவில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது. பாதிப்பு குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கின. இதன் காரணமாக தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நாள் ஒன்றின் பாதிப்பு சராசரியாக 500-ஆக இருந்து வந்தது.

ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் கணிசமான அளவு கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. இதற்கிடையே தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகிறவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் கொரோனா அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகிறவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா பரிசோதனையையும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம். சளி, காய்ச்சல் பாதிப்பு இருக்கிறவர்கள் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். தங்களது பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து