மாவட்ட செய்திகள்

குன்றத்தூர் அருகே பீடி பற்ற வைத்தபோது உடலில் தீப்பிடித்து கொத்தனார் சாவு

குன்றத்தூர் அருகே வலிக்காக மண்எண்ணெய் தேய்த்து கொண்டு பீடி பற்ற வைத்தபோது உடலில் தீப்பிடித்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

பீடி பற்ற வைத்தார்

குன்றத்தூர் அடுத்த நத்தம் கொல்லை தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). கொத்தனார். நேற்று முன்தினம் சேகர் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். மது குடித்திருந்ததாக தெரிகிறது. உடல் வலிக்காக கை, கால்களில் மணஎண்ணெய் தேய்த்து கொண்டு அமர்ந்து இருந்தார்.

சாவு

சிறிது நேரத்தில் பீடி பற்ற வைத்த போது எதிர்பாராதவிதமாக தீப்பொறி உடலில் விழுந்து தீப்பிடித்து கொண்டது. இதை பார்த்த அவரது மனைவி ஸ்ரீமதி தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து