வேப்பூர்,
தேனி மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(வயது 23). இவர் சென்னையில் இருந்து எருமை மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு தேனிக்கு புறப்பட்டார். அந்த லாரியை அம்மா பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பவர் ஓட்டினார். மேலும் அந்த லாரியில் மணிமுருகன் உள்பட 3 பேர் பயணம் செய்தனர்.
இந்த லாரி நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் என்ற இடதில் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது.