மாவட்ட செய்திகள்

வடக்கு விஜயநாராயணம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்

வடக்கு விஜயநாராயணம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம் செய்தது. கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றது.

சிறுத்தை அட்டகாசம்

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று புகுந்து அங்குள்ள கொட்டகைகளில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடுகளை கடித்துக்கொன்று வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். மேலும் அங்கு 16 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் சிறுத்தை சிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று மீண்டும் அட்டகாசம் செய்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கன்றுக்குட்டியை கடித்துக்கொன்றது

பரப்பாடி அருகே உள்ள கழுவூரை சேர்ந்தவர் அதிசயமணி (வயது 45). இவருக்கு சொந்தமான தோட்டம் வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள வடிவாள்புரம் பகுதியில் உள்ளது. அங்கு அவர் தனக்கு சாந்தமான ஒரு மாட்டையும், கன்றுக்குட்டியையும் கட்டி இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றுள்ளது. காலையில் தோட்டத்துக்கு சென்ற அதிசயமணி, கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக்கொன்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் அறிவுரையின்படி வனச்சரக அலுவலர் கருப்பையா, வனவர் பிரகாஷ், வனக்காப்பாளர்கள் மணிகண்டன், சுப்புலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் சிறுத்தயை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது