மாவட்ட செய்திகள்

ரெயில் பெட்டி கழிவறையில் சிக்கிய மதுபாட்டில்கள்

ரெயில் பெட்டி கழிவறையில் சிக்கிய மதுபாட்டில்கள்

தினத்தந்தி

திருச்சி, மார்ச்.13-
திருச்சி ஜங்ஷனுக்கு நேற்று காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் ரெயில்வே குற்ற தடுப்பு துப்பறியும் பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த ரெயில் பெட்டி கழிவறைக்குள் ஒரு பை இருந்தது. அந்த பையை சோதனை செய்தபோது, அதில் 26 மது பாட்டில்கள் கிடந்தன. யாரோ ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் அங்கேயே போட்டு சென்றுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.5 ஆயிரத்து 49 ஆகும். இது தொடர்பாக திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து