மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 9,814 பேர் வேட்பு மனுதாக்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 9 ஆயிரத்து 814 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 34 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 341 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 860 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும் மற்றும் 6,207 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 64 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 674 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 2,442 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 6,634 பேரும் என 9 ஆயிரத்து 814 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். அதனால் உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இன்று ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுவை வாபஸ் பெற 19-ந் தேதி கடைசி நாளாகும். தொடர்ந்து 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து