மாவட்ட செய்திகள்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தினத்தந்தி

அப்போது அதிகாலையில் ஹவுராவில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை எண் 5-ல் நின்றது. ரெயிலில் இருந்து சந்தேகத்துக்கிடமாக இறங்கி வந்த வாலிபரை பிடித்து விசாரித்த போலீசார், அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவர் காரைக்கால், திருநள்ளாறு பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 24) என்பதும், விஜயவாடாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். எங்கிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வரப்பட்டது? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை