மாவட்ட செய்திகள்

தனக்கு தெரியாமல் மகளுக்கு திருமணம் செய்து வைத்த மனைவியை குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

தனக்கு தெரியாமல் மகளுக்கு திருமணம் செய்து வைத்த மனைவியை குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

அம்பர்நாத்,

தானே மாவட்டம் கல்யாண் தக்கர் பாடா பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் குருநாத் (வயது52). இவரது மனைவி மனிஷா (45). இவர்களுக்கு 24 வயதில் மகள் உள்ளார். கணவன், மனைவி இடையே சிறு, சிறு பிரச்சினைகளுக்கு கூட அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்டோ டிரைவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனைவியை பிரிந்து சென்றார்.

இந்தநிலையில் சமீபத்தில் ஆட்டோ டிரைவரின் மகளுக்கு திருமணம் நடந்து உள்ளது. ஆனால் திருமணத்துக்கு மனிஷா, கணவர் குருநாத்தை அழைக்கவில்லை. மேலும் அவரது பெயரை திருமண பத்திரிகையில் போடவில்லை.

இதனால் கடும் ஆத்திரமடைந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன் மனைவி மனிஷாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும் தடுக்க வந்த மகளையும் தாக்கிவிட்டு தப்பி சென் றார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குருநாத்தை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் கல்யாண், ஹாஜி மலாங் ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவர் குருநாத்தை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை