மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு

பொன்முடி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது.

தினத்தந்தி

பெருந்துறை,

பெருந்துறை ஒன்றியம், பொன்முடி ஊராட்சி தலைவராக இருப்பவர் தங்கவேல். இவர் தனது ஊராட்சியில் உள்ள பணியாளர்கள் 3 பேருக்கு, கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இதர நோய்களால் பாதிப்பு அடைந்தால் அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மருத்துவ இழப்பீடு கிடைக்கும் வகையில் தனது சொந்த செலவில் ரூ.12 ஆயிரம் பிரிமியம் செலுத்தி 3 ஸ்டார் ஹெல்த் மருத்துவ காப்பீடுகளை பெற்றுத்தந்துள்ளார்.

இந்த காப்பீடு பத்திரங்கள் வழங்குதல் மற்றும் பொன்முடி ஊராட்சி பகுதிகளில் ஏழைகளுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. சண்முகபுரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பெருந்துறை ஒன்றிய குழு கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல் மருத்துவ காப்பீட்டு பத்திரங்கள் மற்றும் நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொன்முடி, கம்புளியம்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்