ரெயிலில் தவறவிட்ட சென்னை வியாபாரியின் நகை, பணம் மீட்பு
ரெயிலில் தவறவிட்ட சென்னை வியாபாரியின் நகை, பணத்தை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்.
தினத்தந்தி
திண்டுக்கல்,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் நியூ காலனி 7-வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50). அரிசி வியாபாரி. இவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டார்.